இஸ்லாமிய பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல்

10 பேர் மீது வழக்குப் பதிவு; 5 பேர் கைது
இஸ்லாமிய பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல்
Updated on: 
1 min read

திருவாரூர்: முத்​துப்​பேட்​டை​யில் இரு​வேறு நிகழ்​வு​களில் 2 இஸ்லாமிய பெண்​களை மோட்​டார் சைக்​கிள்​களில் அழைத்​துச் சென்ற இளைஞர்​களை தாக்​கிய 10 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்​தனர்.

திரு​வாரூர் மாவட்​டம் முத்​துப்​பேட்டை அருகே உள்ள கொத்​தமங்​கலத்​தைச் சேர்ந்​தவர் கிருஷ்ணராஜ்(24). இவர் நேற்று முன்​தினம் முத்​துப்​பேட்​டைக்கு மோட்​டார் சைக்​கி​ளில் சென்​றபோது, வழி​யில் எடையூர் பேருந்து நிறுத்​தத்​தில் நின்று கொண்​டிருந்த தனது உறவுப் பெண்​ணின் தோழி​யான ஜின்​னத் பென்​சியா என்​பவருக்கு லிப்ட் கொடுத்து அழைத்​துச் சென்​றார்.

முத்​துப்​பேட்டை ரஹமத் பள்ளி அருகே சென்​றபோது அவரை வழிமறித்த 5 பேர், அந்​தப் பெண்ணை ஏன் நீ அழைத்​துச் செல்​கிறாய் எனக் கேட்டு, அவரை சர​மாரியாக தாக்கி உள்​ளனர். இது​தொடர்​பாக கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரின் பேரில் முத்​துப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து பேட்டை கிராமத்​தைச் சேர்ந்த ரியாஸ் முகமது(39), முத்​துப்​பேட்டை ரியாஸ் அகமது (25) ஆகியோரை கைது செய்​தனர். மேலும், பெரோஸ்​கான், அதிராம்​பட்​டினம் தமீம் அன்​சாரி, ரியாஸ் அகமது ஆகியோரை தேடி வரு​கின்​றனர்.

இதேபோல, முத்​துப்​பேட்​டையை அடுத்த அத்​திவெட்​டியை சேர்ந்த முகேஸ்வரன்(25) என்​பவர் தனது சகோ​தரியை பார்க்க வீட்​டுக்கு வந்​திருந்த ஷகிலா பானு என்​பவரை அவரது வீட்​டில் விடுவதற்​காக நேற்று மோட்​டார் சைக்கிளில் அழைத்துச் சென்​றார். அப்​போது, முத்​துப்​பேட்டை பகுதி​யில் அவரை வழிமறித்த 5 பேர், முகேஸ்வரனை சர​மாரியாக தாக்கி உள்​ளனர்.

இது தொடர்​பாக முகேஸ்வரன் கொடுத்த புகாரின்​பேரில் முத்​துப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து முத்​துப்​பேட்​டையை சேர்ந்த அகமது ஜூனைல்(25), முகமது அசிம்(25), பெரோஸ்​கான்(24) ஆகியோரை கைது செய்​தனர். அகமது சுல்​தான், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இஸ்லாமிய பெண்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல்
“அறிவு உலகமா... இல்லை ஊழல் உலகமா?” - பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கருத்து

X