பூந்தமல்லி: போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை

நிஷாந்த்

நிஷாந்த்

Updated on: 
1 min read

பூந்​தமல்லி: மாங்​காட்​டில் போதை மறு​வாழ்வு மையத்​தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், ஊழியர்​களால் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம், மாங்​காடு, சங்​கரா நகர் பகு​தி​யில் செயல்​பட்டு வரும் தனி​யார் போதை மறு​வாழ்வு மையத்​தில் போதைப் பழக்​கத்​துக்கு அடிமை​யான 100-க்​கும் மேற்​பட்​டோர் தங்கி சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

சென்​னை, திரு​வொற்​றியூரைச் சேர்ந்த நிஷாந்த் (23) என்ற இளைஞரும் கடந்த 6 மாதங்​களாகத் தங்கி சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்த மையத்​தில் கோயம்​புத்​தூரைச் சேர்ந்த பாபு (55), ஆவடி கன்​னட​பாளை​யத்​தைச் சேர்ந்த சிவகு​மார் (57) ஆகியோர் சிகிச்சை பெற்று திருந்​தி, இங்​கேயே பணி செய்து வந்​தனர்.

இந்​நிலை​யில் பாபு, சிவகு​மார் குறித்​தும், அவர்​களின் குடும்​பங்​கள் குறித்​தும் நிஷாந்த் அடிக்​கடி தவறாக பேசி வந்​த​தாக கூறப்​படு​கிறது.

நிஷாந்த் நேற்று முன்​தினம் இரவும் பாபு, சிவகு​மாரிடம் தகராறில் ஈடு​பட்​டு, அவர்​கள் குறித்து தவறாக பேசி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் ஆத்​திரமடைந்த இரு​வரும் கத்​தி​யால் குத்​தி​ய​தில் நிஷாந்த் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

தகவலறிந்த மாங்​காடு போலீ​ஸார் நிஷாந்​தின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து வழக்​குப் பதிவு செய்து பாபு, சிவகு​மார் ஆகியோரை கைது செய்​தனர்.

<div class="paragraphs"><p>நிஷாந்த்</p></div>
சென்னையில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in