

திருவள்ளூர்: சென்னை அருகே சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தினமும் வீட்டருகே உள்ள மசூதிக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சிறுமி மசூதிக்கு சென்றபோது மசூதி வாசலில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சிறுமி கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த இளைஞரைப் பிடித்து புதூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முகமது ரபீக் (40) என்பதும் புதூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.