திருவிடைமருதூர் அருகே பூட்டிய வீட்டில் திருடியதாக வங்கதேச மாமியாருடன் சென்னை இளைஞர் கைது

திருவிடைமருதூர் அருகே பூட்டிய வீட்டில் திருடியதாக வங்கதேச மாமியாருடன் சென்னை இளைஞர் கைது
Updated on: 
1 min read

கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே வீட்​டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்​கில், வங்​கதேசத்​தைச் சேர்ந்த மாமியாருடன் சென்னை இளைஞர் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் பிள்​ளை​யாம்​பேட்டை ராஜலட்​சுமி நகர் விரிவாக்க பகுதி​யைச் சேர்ந்​தவர் கார்த்தி. சலூன் கடை மற்​றும் பைனான்ஸ் தொழில் செய்து வரு​கிறார். இவரது மனைவி விஜயலட்​சுமி, கும்​பகோணத்​தில் தையலராக உள்​ளார்.

கடந்த அக்.23-ம் தேதி குழந்​தைகளை பள்​ளிக்கு அனுப்​பி​விட்டு, இரு​வரும் வேலைக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர். பின்​னர் கார்த்தி வீடு திரும்​பியபோது, வீட்​டின் முன்​பக்க கதவு உடைக்​கப்​பட்​டிருந்​தது.

உள்ளே பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், 250 கிராம் வெள்​ளிப் பொருட்​கள், ரூ.2.50 லட்​சம் ரொக்​கம் திருடு​போயிருந்​தது தெரிய​வந்​தது. இது​குறித்த புகாரின்​பேரில் திரு​விடைமருதூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து, சிசி​டிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரித்து வந்​தனர்.

நகை, பணம் மீட்பு

இந்​நிலை​யில் கும்​பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்​கால் பகுதி​யில் சந்​தேகத்​துக்கு இட​மான வகை​யில் நேற்று முன்​தினம் சுற்​றித்​தி​ரிந்த ஒரு பெண் உட்​பட 2 பேரை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர்.

இதில் அவர்​கள் சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த குணசேகர்(40), அவரது மாமியாரும் வங்​கதேச நாட்​டைச் சேர்ந்த ஹானாபேகம்(59) என்​ப​தும், இவர்​கள்​தான் கார்த்தி வீட்​டில் திருடிய​வர்​கள் என்​ப​தும் தெரிய​வந்​தது.

வேறு வழக்குகளில் தொடர்பா?

இதையடுத்து அவர்​களை போலீ​ஸார் கைது செய்து, திருடு​போன நகைகள், பொருட்​கள், பணத்தை மீட்​டனர். தொடர்ந்து, குணசேகரை புதுக்​கோட்டை சிறை​யிலும், ஹானாபேகத்தை சென்னை புழல் சிறை​யில் அடைத்​தனர்.

இது தொடர்​பாக போலீ​ஸார் கூறியது: சென்​னையைச் சேர்ந்த கூலித் தொழிலா​ளியான குணசேகர், சமூகவலை​தளம் மூலம் வங்​கதேச நாட்​டைச் சேர்ந்த ஹானா பேகத்​தின் மகளைக் காதலித்து திரு​மணம் செய்​துள்​ளார்.

பின்​னர் உரிய ஆவணங்களின்றி வங்​கதேசம் சென்று மனைவியுடன் வசித்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் மாமியார் ஹானாபேகத்​துடன் குணசேகர் தமிழகத்​துக்கு வந்து, கும்​பகோணத்​தில் உள்ள தங்​கும் விடுதி​யில் அறை எடுத்​துத் தங்கி, இந்​தத் திருட்​டில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்​பவங்​களில் தொடர்பு உள்​ளதா என விசா​ரித்து வரு​கிறோம் என்​றனர்.

திருவிடைமருதூர் அருகே பூட்டிய வீட்டில் திருடியதாக வங்கதேச மாமியாருடன் சென்னை இளைஞர் கைது
சென்னை | இளைஞரை கொலை செய்து கடற்கரை மணலில் புதைத்த 2 பேர் கைது

X