கோவையில் 4 பேர் கும்பலால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

கோவையில் 4 பேர் கும்பலால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்.

இவரது மனைவி கிரிஜா. கூலித்தொழிலாளி. இவர்களது மகன் பிரதீப்குமார் (34).திருமணமாகாத இவர், கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சாமநாயக்கன்பாளையம் விஜிபி கார்டன் பகுதியில் நான்கு பேர் கும்பலாக சேர்ந்து பிரதீப்குமாரை தாக்கினர்.

இதுகுறித்து உறவினர் ஒருவர் மூலம் தகவல் அறிந்த கிரிஜா அங்கு சென்று தனது மகனை மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பிரதீப்குமார் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கிரிஜா பெரியநாயக்கன் பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீஸார் விசாரித்தனர். அதில், பிரதீப்குமாரை தாக்கியவர்கள் சாமநாயக்கன்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த கார்த்தி்க் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23), சிவா (24) எனத் தெரியவந்தது.

செல்போன் விவகாரத்தால் இவர்கள் நால்வரும் பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்தது. இவர்கள் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

கோவையில் 4 பேர் கும்பலால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
பூந்தமல்லி: பெண் தூய்மைப் பணியாளரை கொலை செய்து 8 பவுன் நகை திருட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in