சென்னை | ரூ.40 லட்சம் கையாடல் சந்தேகத்தால் தாக்குதல்: மாடியிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு

சென்னை | ரூ.40 லட்சம் கையாடல் சந்தேகத்தால் தாக்குதல்: மாடியிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: பணம் கையாடல் குற்​றச்​சாட்​டில் அறை​யில் அடைத்து தாக்​கிய​தால், வேதனை அடைந்த இளைஞர் மாடியி​லிருந்து குதித்து தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார்.

சென்னை அண்ணா நகர் 20-வது மெயின் ரோட்​டில் வசித்து வந்​தவர் ஆகாஷ் (23). அண்ணா நகரில் செயல்​பட்டு வரும் டிராவல்ஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார்.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை, அந்த நிறு​வனத்​தின் 4-வது மாடியி​லிருந்து கீழே விழுந்து படு​காயமடைந்த அவர், அரு​கிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டும், ஆகஸ்ட் 2-ம் தேதி அவர் உயி​ரிழந்​தார்.

இந்​தச் சம்​பவத்​தில் சந்​தேகம் இருப்​ப​தாகக் கூறிய ஆகாஷின் உறவினர்​கள், அவர் தற்​கொலை செய்​திருக்க வாய்ப்​பில்லை என்​றும், சம்​பவம் தொடர்​பாக முழு​மை​யான விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும் அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக, சம்​பவம் நடை​பெற்ற அலு​வல​கம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேமரா (சிசிடி​வி) பதிவு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.

அதில் சம்​பவத்​துக்கு முன்பு ஆகாஷை அலு​வல​கத்​தின் 4-வது மாடி​யில் உள்ள ஓர் அறை​யில் சிலர் அடைத்து வைத்து தாக்கி விசா​ரித்த காட்​சிகள் பதி​வாகி​யிருந்​தன. இதையடுத்து நிறுவன ஊழியர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், டிராவல்ஸ் நிறு​வனத்​தில் சுமார் ரூ.40 லட்​சம் மாய​மானது தொடர்​பாக ஆகாஷ் மீது சந்​தேகம் எழுந்​த​தாக​வும், இதுகுறித்து நிறுவன உரிமை​யாளர் ஷெனாய் நகரைச் சேர்ந்த சுகு​மார் (57), தனக்​குத் தெரிந்த இரு​வரை அழைத்து வந்து ஆகாஷிடம் விசா​ரணை நடத்த ஏற்​பாடு செய்​திருந்​த​தாக​வும் தெரிய வந்தது.

மேலும், அந்த இரு​வரும் ஆகாஷை தனி அறை​யில் வைத்து மிரட்​டிய​தாக​வும், தாக்​கிய​தாக​வும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதன் பின்​னர் மன உளைச்​சலுக்கு ஆளான ஆகாஷ் 4-வது மாடியி​லிருந்து குதித்​த​தாக போலீ​ஸாரின் முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்​து, தற்​கொலைக்கு தூண்​டு​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், டிராவல்ஸ் நிறுவன உரிமை​யாளர் சுகு​மாரை கைதுசெய்து சிறை​யில் அடைத்​தனர். இதே வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் மேலும் இரு​வரை தனிப்​படை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.

சென்னை | ரூ.40 லட்சம் கையாடல் சந்தேகத்தால் தாக்குதல்: மாடியிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு
விமானப் படை தேர்வில் ஆள்மாறாட்டம்: ஆவடியில் ஹரியானா இளைஞர்கள் 4 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in