

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி போலீஸார், வீடூர் அணை அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவர் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், விக்கிரவாண்டி அடுத்த வீடூரைச் சேர்ந்த சரத் என்பதும், தப்பி ஓடியவர் ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த முகிலன் என்பதும், இவர்கள் அப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிந்து சரத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 417 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகிலனை தேடி வருகின்றனர்.