

சென்னை: தாழம்பூர், செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சேத்துப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மறுநாள் காலை மண்டபத்தில் உள்ள குளியல் அறையில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, ஜன்னல் வழியாக யாரோ வீடியோ எடுப்பதுபோல் தெரிந்தது. இதைக்கண்டு அப்பெண் கூச்சலிடவே, அந்த நபர் தப்பி ஓடினார்.
மண்டபத்தில் திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடியோ எடுத்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் வேளச்சேரியைச் சேர்ந்த பிரபு(29) என்பதும், திருமணத்துக்கு அலங்காரம் செய்ய வந்த பெண்ணின் கணவர் என்பதும் தெரிந்தது. திருமண மண்டப குளியல் அறையில் பலமுறை இதேபோல் ரகசிய வீடியோ எடுத்தது தெரியவந்தது. பிரபுவை போலீஸார் கைது செய்தனர்.