

சென்னை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி (43). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை எழும்பூரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை லட்சுமி ஓரமாக போகச் சொன்னாராம்.
அதற்கு அந்த இளைஞர் இந்தியில் தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனே லட்சுமி சத்தம் போடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி லட்சுமியை தாக்கிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் (25) என்பவரை கைது செய்தனர்.