சென்னை | காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

சென்னை | காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
Updated on
1 min read

சென்னை: ​வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்துக்கு நேற்று இளம் பெண் ஒரு​வர் வந்​தார். அவர் மறைத்து வைத்​திருந்த விஷ பாட்​டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை குடிக்க முயன்​றார்.

இதைக் கண்டு அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார் அதிர்ச்சி அடைந்​தனர். உடனடி​யாக, விஷப்​பாட்​டிலை பறி​முதல் செய்​து, அந்த பெண்ணை காப்​பாற்​றினர்.

பின்​னர், போலீ​ஸாரின் விசா​ரணை​யில், தற்​கொலைக்கு முயன்​றவர் விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த விஜயலட்​சுமி (38) என்​பது தெரிய​வந்​தது.

காதலன் வேறு ஒரு பெண்ணை திரு​மணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்​டார். இந்த விரக்​தி​யில் தற்​கொலை செய்து கொள்ள வந்​தேன்.

என்னை ஏமாற்​றிய காதலன் மீது போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என போலீ​ஸாரிடம் அவர் முறை​யிட்​டார். இந்த விவ​காரம் தொடர்​பாக வேப்பேரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்னை | காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
நாளை முதல் 2 நாட்களுக்கு வெப்பம் 4 டிகிரி உயர வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in