நந்தம்பாக்கத்தில் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

நந்தம்பாக்கத்தில் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது
Updated on
1 min read

நந்தம்பாக்கத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோ வாக எடுத்து மிரட்டி, பணம் பறித்த இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த பெண் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த சென்னை, கொடுங்கையூர், காந்தி தெருவை சேர்ந்த விஷ்வா (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்த அந்த பெண்ணிடம் தான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார். அதனை பெண்ணுக்கு தெரியாமல் விஷ்வா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்தார்.

மேலும், பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.40 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பெண் ரூ.40 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா, இருவரும் தனியாக இருந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோக் களை சமூக வலைதளங்களில் விட்டு விடுவதாக் மிரட்டத் தொடங்கினார். இதையடுத்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஷ்வா மீது புகார் அந்த பெண் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விஷ்வாவை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நந்தம்பாக்கத்தில் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி: 234 வேட்பாளர்களும் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in