சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஸ்ரீவை​குண்​டம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த தொழிலா​ளிக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மகா​ராஜன் (42), தொழிலா​ளியான இவர், கடந்த 2020-ம் ஆண்டு அதே பகு​தியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்​ததுடன், கொலை மிரட்​டலும் விடுத்​துள்​ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவை​குண்​டம் மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப​திவு செய்​து, மகா​ராஜனை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை தூத்​துக்​குடி போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

குற்​றம்சாட்​டப்​பட்ட மகா​ராஜனுக்​கு, இயற்கை மரணம் வரும் வரை ஆயுள் தண்​டனை மற்​றும் ரூ.12,500 அபராதம் விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்​பளித்​தார்.

மேலும் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியி​லிருந்து ரூ.5 லட்​சம் வழங்​க​வும் உத்​தர​விட்​டார்.

இவ்​வழக்​கின் சாட்​சிகளை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி குற்​ற​வாளிக்கு தண்​டனை பெற்​றுத் தந்த ஸ்ரீவை​குண்​டம் டிஎஸ்பி நிரேஷ் மற்​றும் வழக்கை திறம்பட புல​னாய்வு செய்த அப்​போதைய காவல் ஆய்​வாளர் லெட்​சுமி பிர​பா, சிறப்​பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்​கறிஞர் ஜுடு ஏஞ்​சலோ, தலைமை காவலர் அரி​ராணி ஆகியோரை எஸ்​.பி. மதன் பாராட்​டி​னார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
கோவையில் நாளை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in