திருப்பத்தூர் இரட்டை கொலையில் தொழிலாளி கைது

கைதான சஞ்சீவ்காந்தி, கொலையான மாலினி, ரஞ்சித்குமார்.

கைதான சஞ்சீவ்காந்தி, கொலையான மாலினி, ரஞ்சித்குமார்.

Updated on: 
1 min read

திருப்பத்தூர்: திருப்​பத்​தூர் அடுத்த தோரணம்​பதி பகுதி​யில் உள்ள காலி வீட்​டுமனை பிரிவு ஒன்​றில் நேற்று முன்தினம் ஆணும், பெண்​ணும் கொலை செய்​யப்​பட்​டுக் கிடந்தனர். திருப்​பத்​தூர் கிராமிய காவல் துறை​யினர் விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர்.

இதில், கொலை​யானவர்​கள் திரு​வண்​ணா​மலை மாவட்​டம் பாச்​சல் பகுதி​யைச் சேர்ந்த ரஞ்​சித்​குமார் (30), திருப்​பத்​தூர் மாவட்​டம் திப்​பசமுத்​திரம் பகுதி​யைச் சேர்ந்த சிரஞ்​சீவி என்​பவரின் மனைவி மாலினி (30) என்​பது தெரிய​வந்​தது. இரட்டை கொலை தொடர்​பாக செங்​கம் பகுதி​யைச் சேர்ந்த தொழிலாளி சஞ்​சீவ் காந்தி (35) என்​பவரை கைது செய்​தனர்.

கொலைக்​கான காரணம் குறித்து காவல் துறை​யினர் கூறும்​போது, “திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செங்​கம் பகுதி​யைச் சேர்ந்த மாலி​னிக்​கும், திருப்​பத்​தூர் அடுத்த திப்​பசமுத்​திரம் பகுதி​யைச் சேர்ந்த சிரஞ்​சீவிக்​கும் கடந்த 17 ஆண்​டுகளுக்கு முன்பு திரு​மணம் நடந்​தது.

இவர்​களுக்கு 13 வயதில் பெண் குழந்​தையும், 11 வயதில் ஆண் குழந்​தையும் உள்​ளனர். மாலினி பள்​ளி​யில் படிக்​கும்​போதே சஞ்​சீவ் காந்தி என்​பவருடன் காதல் ஏற்​பட்​டுள்​ளது. ஆனால், குடும்​பத்​தினர் ஏற்​பாட்​டில் சீரஞ்​சி​வியுடன் திரு​மணம் நடந்​ததால், சஞ்​சீவ் காந்​தி​யுடன் திரு​மணத்தை மீறிய உறவில் இருந்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், திரு​வண்​ணா​மலை மாவட்​டம் பாச்​சல் பகுதி​யைச் சேர்ந்த உறவின​ரான ரஞ்​சித்​குமார் (30) என்​பவருடன் திரு​மணத்தை மீறிய உறவு ஏற்​பட்​டுள்​ளது. இத​னால், சஞ்​சீவ் காந்​தி​யுடனான தொடர்பை மாலினி துண்​டித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக, இரு​வருக்​கும் தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது. கொலை நடந்த அன்று மாலி​னியை கைபேசி​யில் தொடர்​பு​கொண்டு சஞ்​சீவ் காந்தி பேசி​யுள்​ளார். அப்​போது, தான் ரஞ்​சித்​துடன் காரில் தோரணம் பகுதி​யில் உள்ள காலி வீட்​டுமனை பிரிவு பகுதி​யில் இருப்​ப​தாக கூறியுள்​ளார். இதைக்​கேட்டு, ஆத்​திரம் அடைந்த சஞ்​சீவ் குமார், அங்கு சென்று மாலி​னியுடன் தக​ராறில் ஈடு​பட்​டதுடன் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் ரஞ்​சித்​குமாரை வெட்​டியுள்​ளார். இதனை தடுக்க வந்த மாலி​னியையும் வெட்​டி​விட்டு தப்​பியுள்​ளார்’’ என்றனர்.

<div class="paragraphs"><p>கைதான சஞ்சீவ்காந்தி, கொலையான மாலினி, ரஞ்சித்குமார்.</p></div>
ஏற்காடு மலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு

X