உண்டியல் காணிக்கை எண்ணும்போது ராமநாத சுவாமி கோயிலில் பணம் திருடிய பெண் கைது

உண்டியல் காணிக்கை எண்ணும்போது ராமநாத சுவாமி கோயிலில் பணம் திருடிய பெண் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் உண்டியல்​ காணிக்கை எண்​ணும் பணி நேற்​று​ முன்​தினம் நடை​பெற்​றது. திருச்சி மாவட்​டம் துறையூரைச் சேர்ந்த பிர​பாவதி (40) உண்டியல் காணிக்கை எண்​ணும் பணி​யில் தன்​னார்​வல​ராகப் பங்​கேற்​றார்.

அவரது நடவடிக்​கை​யில் சந்​தேகமடைந்த கோயில் ஊழியர்​கள், அவரை கோயில் அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று சோதனை செய்​தனர். அப்​போது, பிர​பாவதி ரூ.1 லட்​சத்தை திருடியது தெரிய​வந்​தது.

இதுகுறித்து கோயில் இணை ஆணை​யர் செல்​லதுரை ராமேசுவரம் காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரின் பேரில், பிர​பாவ​தி கைது செய்யப்பட்டார்.

உண்டியல் காணிக்கை எண்ணும்போது ராமநாத சுவாமி கோயிலில் பணம் திருடிய பெண் கைது
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று லேசாக மழை பெய்ய வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in