

புதுடெல்லி: டெல்லியின் பிதாம்புரா பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மங்கோல்புரி பகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் சரஸ்வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அப்பெண்ணை ஒருவர் கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பிறகு அப்பெண்ணை பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பெண் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு வழக்குப் பதிவு செய்த போலீஸார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.