வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி தங்க பிஸ்கட், நகைகளை விட்டுச்சென்ற பெண்

வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி தங்க பிஸ்கட், நகைகளை விட்டுச்சென்ற பெண்
Updated on
1 min read

சென்னை: வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட், நகைகளை விட்டுச் சென்ற பெண், அதை வாங்க வராததால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி, 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 5-ம் தேதி பர்தா அணிந்தபடி பெண் ஒருவர் வந்தார். அவர், தன்னை சர்மிளா பானு என அறிமுகம் செய்து கொண்டார்.

தனது கணவர் அப்துல் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அதேபோல், தனக்கும் கணக்கு தொடங்க வேண்டும் என கேட்டுள்ளார். மேலும், வங்கியில் உள்ள லாக்கர் வசதி குறித்தும் கேட்டுள்ளார்.

இந்நிலையில், வங்கி கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச்சென்ற அந்தப் பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதற்கிடையே, அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு பர்ஸ் இருந்தது.

அதை வங்கி அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, தங்க பிஸ்கட், தங்க வளையல் உட்பட 1 கிலோ 256 கிராம் தங்கம் இருந்தது.

அதன் மதிப்பு ரூ.1.50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வங்கியின் தணிக்கை குழுவினர் நேரில் வந்து தங்க பிஸ்கெட் மற்றும் வளையல்களை ஆய்வு செய்த போது அனைத்தும் தங்கம் என்பது தெரிந்தது.

இதற்கிடையே, 5 நாட்களாக அந்தப் பெண் திரும்ப வராததால், வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்கத்தை ஒப்படைத்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, வங்கி மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட் டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். நகையை வங்கியில் வைத்துச் சென்ற பெண் பர்தா அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் போலீஸா ருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி தங்க பிஸ்கட், நகைகளை விட்டுச்சென்ற பெண்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் எஸ்.ஐ மகளை தாக்கி நகை பறிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in