காதல் தொல்லையால் பெண் தற்கொலை: இளைஞரை கல்லால் அடித்து கொன்ற உறவினர்கள்

கன்னியாகுமரி அருகே 5 பேர் கைது
Updated on: 
1 min read

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி அருகே கொட்​டாரத்தை அடுத்த பெரிய​விளை​யைச் சேர்ந்​தவர் ஆன்​றணி​ராஜ் (27). பொக்​லை​யன் இயந்​திரம் வைத்து தொழில் செய்து வந்​தார். அதே ஊரைச் சேர்ந்​தவர் ஞானசெல்​வம் என்ற அழகேசன். ஓய்​வு​பெற்ற ராணுவ வீர​ரான இவர், கொட்​டாரத்​தில் ஆட்டோ ஒட்டி வரு​கி​றார். அழகேசனின் மகள் ஏஞ்​சல் (23), கல்​லூரி படிப்பை முடித்​து​விட்டு தனி​யார் நிறு​வனத்​தில் வேலை பார்த்து வந்​தார். இவரை, ஆன்​ற​னி​ராஜ் ஒரு தலை​யாக காதலித்​துள்​ளார். ஆனால், ஏஞ்​சல் இதை ஏற்​க​வில்​லை.

இது தொடர்​பாக, ஆன்​றணி​ராஜ் மீது கன்​னி​யாகுமரி போலீ​ஸில் புகார் கொடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் அவரை காவல் நிலை​யத்​துக்கு வரவழைத்து எச்​சரித்து அனுப்​பினர். ஆனாலும், ஏஞ்​சலுக்கு தொடர்ந்து ஆன்​றணி​ராஜ் தொல்லை கொடுத்து வந்​துள்​ளார். இதனால் மனவேதனை அடைந்த ஏஞ்​சல், நேற்று முன்​தினம் மாலை வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டார்.

இந்த தகவலை அறிந்த ஆன்​றணி​ராஜ், நேற்று முன்​தினம் இரவு பெரிய​விளைக்கு வந்​துள்​ளார். அவரைப் பார்த்​ததும் ஏஞ்​சலின் உறவினர்​கள் ஆத்​திரம் அடைந்​தனர். அவர்​கள் அப்​பகு​தி​யில் கிடந்த கல் மற்​றும் கட்​டை​யால் ஆன்​ற​னி​ராஜை தாக்​கி​யுள்​ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுதொடர்​பாக மாவட்ட எஸ்​.பி. அன்​சுல் நாகர், கன்​னி​யாகுமரி டிஎஸ்பி பிர​காஷ் ஆகி​யோர் விசா​ரணை நடத்​தினர். ஏஞ்​சல், ஆன்​ற​னி​ராஜ் ஆகி​யோரின் உடல்​களை பிரேத பரி​சோதனைக்​காக ஆசா​ரிப்​பள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். ஆன்​றனி ராஜ் கொலை தொடர்​பாக, பெரிய​விளை​யைச் சேர்ந்த பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (22), ரவிசெல்​வன் (56), ஏசுநேச செல்​வன் (58) ஆகிய 5 பேரை போலீ​ஸார் நேற்​று கைது செய்​தனர்​.

காதல் தொல்லையால் பெண் தற்கொலை: இளைஞரை கல்லால் அடித்து கொன்ற உறவினர்கள்
டெல்லி பேரணி: எஸ்ஐஆர் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in