கோவில்பட்டியில் அடுத்தடுத்து 2 பேரை திருமணம் செய்து பணம் பறித்த பெண்ணுக்கு வலை

வளர்ப்புத் தாய், தந்தை கைது
கோவில்பட்டி கோயிலில் ரஞ்சித் குமாரை திருமணம் செய்த கார்த்திகா. நாஞ்சிக்கோட்டையில் சித்தார்த்தனை திருமணம் செய்த கார்த்திகா.

கோவில்பட்டி கோயிலில் ரஞ்சித் குமாரை திருமணம் செய்த கார்த்திகா. நாஞ்சிக்கோட்டையில் சித்தார்த்தனை திருமணம் செய்த கார்த்திகா.

Updated on: 
1 min read

கோவில்பட்டி: அடுத்​தடுத்து 2 பேரை திரு​மணம் செய்து பணம், நகைகளை கோவில்​பட்​டியைச் சேர்ந்த பெண் மோசடி செய்​த​தாக அளித்த புகாரி்ன் பேரி்ல், அப்​பெண்​ணின் வளர்ப்​புத் தாய், தந்​தையை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கோவில்​பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் மாரியப்​பன். இவரது மனைவி முனீஸ்வரி (47). இவர்​களது மகள் கார்த்​திகா. இவருக்​கும், நாமக்​கல் மாவட்​டம் கன்​னூர்​பட்டி கோவிந்​தம்​பாளை​யத்​தைச் சேர்ந்த ரஞ்​சித்​குமார் (37) என்​பவருக்​கும் கடந்த 1-ம் தேதி, கோவில்​பட்​டி​யில் உள்ள கோயி​லில் திரு​மணம் நடந்​துள்​ளது.

நாமக்​கல் ராசிபுரத்​தைச் சேர்ந்த தரகர் மூலம் இந்த திரு​மணம் நடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதற்​காக தரகருக்கு ரூ.2.50 லட்​சம் கொடுத்​ததுடன், திரு​மணத்​துக்​காக ரூ.1.25 லட்​சம் ரஞ்​சித்​குமார் செலவு செய்​துள்​ளார். இந்​நிலை​யில், திரு​மணம் முடிந்து கணவருடன் நாமக்​கல் சென்ற கார்த்​திகா, கடந்த 5-ம் தேதி, தனது தாய்க்கு உடல்​நிலை சரி​யில்​லாததால் ஊருக்​குச் செல்ல வேண்​டும் எனக் கூறியுள்​ளார்.

உடனடி​யாக, அவரும், ரஞ்​சித்​குமாரும் கோவில்​பட்டி வந்​துள்​ளனர். அப்​போது, சில நாட்​கள் தாயுடன் இருந்து, அவரை கவனித்​துக்​கொள்ள வேண்​டும் என கார்த்​திகா கூறிய​தால், அவரை விட்​டுவிட்டு ரஞ்​சித்​குமார் மட்​டும் நாமக்​கல் சென்​றுள்​ளார்.

இந்​நிலை​யில், தஞ்​சாவூர் மாவட்​டம் உப்​பண்​டார்​பட்​டியைச் சேர்ந்த சித்​தார்த்​தன் (36) என்​பவர், ரஞ்​சித்​குமாரை தொடர்​பு​கொண்டு, கார்த்​தி​கா​வுக்​கும் தனக்​கும் 13.9.2026-ல் திரு​மணம் நடந்​த​தாகவும், தன்​னைப் போலவே உங்​களை​யும் ஏமாற்றி அவர் திரு​மணம் செய்​துள்​ளார் எனவும் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து, ரஞ்​சித்​குமாரும், சித்​தார்த்​தனும் கோவில்​பட்​டி​யில் உள்ள கார்த்​திகா வீட்​டுக்கு நேற்று முன்​தினம் வந்து, அவரது தாய் முனீஸ்வரி​யிடம் பேசி​யுள்​ளனர். அப்​போது இருதரப்​பினருக்​கும் இடையே தக​ராறு ஏற்​பட்​டது. தகவல் அறிந்து, கோவில்​பட்டி மேற்கு போலீ​ஸார் அங்கு வந்து, அவர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இதில், மாரியப்​பன், முனீஸ்வரியுடன் கூட்டு சேர்ந்து முதலில் சித்​தார்த்​தனையும், அதன் பின்​னர் ரஞ்​சித் குமாரை​யும் ஏமாற்றி, கார்த்​திகா திரு​மணம் செய்​ததும், அவர்​களிடம் இருந்து பணம், நகைகளை பெற்​றுக்​கொண்டு மோசடி​யில் ஈடு​பட்​டதும் தெரிய​வந்​தது. சித்​தார்த்​தனிடம் 3.5 பவுன் நகைகள், ரூ.2.50 லட்​சம் ரொக்​கம் வாங்கி ஏமாற்​றியதுடன், பல லட்​சம் ரூபாய் கல்​யாணத்​துக்கு செலவு செய்ய வைத்​துள்​ளார்.

மேலும், கார்த்​தி​கா​வின் உண்​மையான தந்தை ராஜன், தாய் ஈஸ்வரி ஆகியோர் மலேசி​யாவில் இருப்​ப​தும், கார்த்​திகா தனது பெரியப்பா மாரியப்​பன், பெரியம்மா முனீஸ்வரி ஆகியோர் பராமரிப்​பில் இருந்​ததும் தெரிய​வந்​தது. முனீஸ்வரியை போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர் அவர் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டார். மாரியப்​பன் (53) நேற்று கைது செய்​யப்​பட்​டார். கார்த்​தி​காவை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>கோவில்பட்டி கோயிலில் ரஞ்சித் குமாரை திருமணம் செய்த கார்த்திகா. நாஞ்சிக்கோட்டையில் சித்தார்த்தனை திருமணம் செய்த கார்த்திகா.</p></div>
மதுரை விமான நிலையத்தில் நடிகர் தனுஷை சூழ்ந்த ரசிகர்கள்

X