

மதுரை விமான நிலையத்தில் நடிகர் தனுஷை வரவேற்ற ரசிகர்கள்.
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் தனுஷை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவரை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். ரசிகர்களை பார்த்து கையை அசைத்து தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பின்னர், அவர் விமான நிலையத்தைவிட்டு காரில் ஏற வந்தபோதும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார் கட்டுப்படுத்தி, நடிகர் தனுஷை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அண்மைக்காலமாக நடிகர் தனுஷ் அரசியலில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், வழக்கமாக அவரை காண வரும் ரசிகர்களைவிட பெருந்திரளானோர் நேற்று திரண்டிருந்தனர்.