முருகன் திருக்கல்யாணம் குறித்து அவதூறு கருத்து: பெண் மீது வழக்குப் பதிவு

Updated on: 
1 min read

தஞ்சாவூர்: இந்து மத கட​வுளான முருகன் திருக்​கல்​யாணம் குறித்து சமூக வலை​தளத்​தில் அவதூறு கருத்தை வெளி​யிட்​ட​தாக இஸ்லாமியப் பெண் மீது பட்​டுக்​கோட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை பள்​ளிவாசல் பகுதி​யைச் சேர்ந்​தவர் பாத்​திமா என்​கிற ரம்​ஜான்​பேகம் (36). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்​கத்​தில், முருக​னின் திருக்​கல்​யாணத்தை கொச்​சைப்​படுத்​தும் வித​மாக கருத்​துகளை பதி​விட்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

இது​குறித்து பட்​டுக்​கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்​தைச் சேர்ந்த தஞ்​சாவூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் செய​லா​ளரான கோவிந்​த​ராஜ் என்​பவர் பட்​டுக்​கோட்டை டவுன் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில், ரம்​ஜான்​பேகம் மீது பிஎன்​எஸ் 192, 299, 352 ஆகிய பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முருகன் திருக்கல்யாணம் குறித்து அவதூறு கருத்து: பெண் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் லாரி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

X