ரூ.11 லட்சத்தை மீட்டுத் தர கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்

ரூ.11 லட்சத்தை மீட்டுத் தர கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
Updated on
1 min read

சென்னை: ரூ.11 லட்​சத்தை மீட்​டுத் தர வேண்​டும் எனக் கூறி, காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்​குளிக்க முயன்ற பெண்​ணால் அப்​பகு​தி​யில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்​னை, பட்​டாளம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஷகீலா (51). இவர் நேற்று காலை, வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வலக நுழை​வாயி​லில் மண்​ணெண்​ணெயை உடலில் ஊற்றி தீ வைத்​துக் கொள்ள முயன்​றார்.

இதை கண்​டு, அங்கு பாது​காப்புப் பணி​யில் இருந்த போலீ​ஸார் அதிர்ச்சி அடைந்​தனர். உடனடி​யாக அவரை மீட்​டனர். அவருக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால் உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.

முன்​ன​தாக, ஷகீலா செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், மஸ்​கட்​டில் 20 ஆண்​டு​களாக வீட்டு வேலை செய்து வந்​தேன். அப்​போது, அங்கு சூப்​பர் மார்க்​கெட் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு​வர் எனக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்​தார். நாங்​கள் கணவன், மனை​வி​யாக குடும்​பம் நடத்​தினோம்.

தொழிலில் நஷ்டம் ஏற்​பட்டுவிட்​டது எனக் கூறி, பல்​வேறு தவணை​களாக ரூ.11 லட்​சம் வரை பெற்​றுக் கொண்​டார். வழக்​கம்​போல் நாங்​கள் அண்​மை​யில் சென்னை வந்​தோம்.

அப்​போது, என்னை விட்டு விட்​டு, அவர் மட்​டும் வெளி​நாடு சென்று விட்​டார். அவரை தற்​போது தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. எனவே, என்​னிடம் அவர் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்​றுத் தர வேண்​டும்.

இதுகுறித்​து, காவல் துறை​யில் புகார் அளித்​தும் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை. எனவே, தற்​கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்​குளிக்​க முயன்​றேன்​ என்​றார்​.

ரூ.11 லட்சத்தை மீட்டுத் தர கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
பைக்கில் லிஃப்ட் கொடுப்பதுபோல் பூக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in