பைக்கில் லிஃப்ட் கொடுப்பதுபோல் பூக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது

பைக்கில் லிஃப்ட் கொடுப்பதுபோல் பூக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
Updated on
1 min read

சென்னை: விழுப்​புரத்​தைச் சேர்ந்​தவர் ஆறு​முகம் (21). கோயம்​பேடு பூ மார்க்​கெட்​டில் வேலை செய்கிறார்.

கடந்த 11-ம் தேதி இரவு விரு​கம்​பாக்​கம் ஆவிச்சி பள்ளி அருகே நின்றுகொண்​டு, அந்த வழி​யாக வந்த இருசக்கர வாக​னங்​களை மறித்து கோயம்​பேடு செல்ல லிஃப்ட் கேட்டார்.

அப்​போது அங்கு பைக்​கில் வந்த 2 பேர் ஆறு​முகத்தை கோயம்​பேட்​டில் இறக்​கி​ விடு​வ​தாகக் கூறி அழைத்​துச் சென்​றனர். பின்னர் அவரை தாக்கி கத்​தி​முனை​யில் அவரிட​மிருந்த பணம், செல்​போனை பறித்து தப்​பினர்.

இதுதொடர்​பாக ஆறு​முகம், வளசர​வாக்​கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், செங்​குன்​றம் பாடியநல்​லூரைச் சேர்ந்த விஜய்​பிர​சாத் (27) என்பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். தலைமறை​வாக உள்ள அவரது கூட்​டாளியைத் தேடி வரு​கின்​றனர்.

பைக்கில் லிஃப்ட் கொடுப்பதுபோல் பூக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in