மாம்பாக்கத்தில் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது

மாம்பாக்கத்தில் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது
Updated on
1 min read

திருப்போரூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கொளத்தூர் செல்லும் சாலையில் ரமேஷ் லால் (42), என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பெண் ஒருவர் கடைக்கு நகை வாங்குவதுபோல் வந்துள்ளார். அவருக்கு சில நகைகளை கடை உரிமையாளர் காண்பித்துள்ளார்.

அப்போது அவர் தான் கொண்டு வந்த கவரிங் நகையை வைத்துவிட்டு, 3 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பினார். இது குறித்து ரமேஷ் லால் தாழம்பூர் போலீஸில் புகார் அளித்தார்.

விசாரணையில், அவர் ஆந்திராவைச் சேர்ந்த மோனா (28) என்பதும் கொளத்தூர் ஊராட்சியில் அடங்கிய கண்ணாபுரத்தில் வசிப்பதும், முன்னாள் இந்தி ஆசிரியை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து, 3 பவுனை பறிமுதல் செய்தனர்.

மாம்பாக்கத்தில் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது
போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in