போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்: விமானத்தில் இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் கைது

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்: விமானத்தில் இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் கைது
Updated on
1 min read

சென்னை: இலங்கை செல்​லும் விமானத்​தில் பயணிக்க சென்னை விமான நிலை​யத்துக்கு வந்த பெண் ஒருவர் மீது போலீ​ஸாருக்கு சந்​தேகம் எழுந்தது. அவரை சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள போலி பாஸ்போர்ட் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

அப்​போது, அந்த பெண்​ணின் பெயர் பேபி லோனா (48). இலங்கை நாட்​டுக் குடி​யுரிமை பெற்​றவர். இந்​திய​ரான முஸ்​தாக்அகமது என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டுள்​ளார்.

2015-ம் ஆண்டு இலங்​கையி​லிருந்து விமானம் மூலம் இந்​தியா வந்து அகதி​யாக தஞ்​சாவூர் மாவட்​டம், திரு​விடைமருதூரில் வாடகை வீட்​டில் கணவருடன் வசித்து வந்​துள்​ளார்.

பின்​னர் அவர் இலங்கை பிரஜை என்​பதை மறைத்து ஆதார் கார்​டு, பான் கார்டு மற்​றும் வாக்​காளர் அடை​யாள அட்​டையைப் பெற்​றுள்​ளார். அதை அடிப்​படை​யாக வைத்​து, இந்​தி​யர் என இந்​திய பாஸ்போர்ட் பெற்று தற்​போது இலங்​கைக்கு தப்ப முயன்​றது தெரிய​வந்​தது.

அவரை சென்னை பன்​னாட்டு விமான நிலைய வெளி​நாட்​ட​வர் பதிவு மண்டல அலு​வலர் பிடித்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​துள்​ளார். இதையடுத்து பேபி லோனாவை போலீ​ஸார் நேற்று முன்​தினம்​ கைது செய்​து சிறையில் அடைத்தனர்.

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்: விமானத்தில் இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் கைது
சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் நண்பருடன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in