வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி அளிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: நீர்வளத் துறையினர் கைது

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி அளிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: நீர்வளத் துறையினர் கைது
Updated on
1 min read

திருவாரூர்: ​நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் தங்​கும் விடு​திக்​கும், வாய்க்​காலுக்​கும் இடையே பாலம் கட்ட அனு​மதி அளிக்க ரூ.3 லட்​சம் லஞ்​சம் வாங்​கியதாக திரு​வாரூர் நீர்​வளத் துறை உதவி செயற்​பொறி​யாளர் மற்றும் உதவிப் பொறி​யாளர் கைது செய்​யப்பட்டனர்.

வேளாங்​கண்​ணி​யைச் சேர்ந்​தவர் அபினேஷ் (26). இவர், வேளாங்​கண்​ணி​யில் தங்​கும் விடுதி கட்டி வரு​கிறார். இவரது விடு​திக்கு எதிரே வாய்க்​காலை கடக்க பாலம் கட்​டிக் கொள்ள அனு​மதி கோரி திரு​வாரூரில் உள்ள நீர்​வளத் துறை வெண்​ணாறு வடிநில கோட்​டச் செயற்​பொறி​யாளர் அலு​வல​கத்​தில் விண்​ணப்​பித்​தார்.

இதற்கு வடிநில கோட்ட உதவி செயற்​பொறி​யாளர் மாணிக்​கவேல், உதவிப் பொறி​யாளர் வினோத்​ ஆகியோர் ரூ.3 லட்​சம் லஞ்​சம் கேட்​டதாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து அபினேஷ், திரு​வாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இதைத்​தொடர்ந்​து, போலீ​ஸாரின் வழி​காட்​டலின்படி, நேற்று இருவரிடமும் ரசாயனம் தடவிய ரூ.3 லட்​சம் பணத்தை அபினேஷ் அளித்​தார். அப்போது டிஎஸ்பி நந்​தகோ​பால்தலை​மை​யிலான லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் 2 பேரை​யும் கையும், களவு​மாக கைது செய்​தனர். தொடர்ந்து அவர்​களிடம் விசா​ரணை நடக்கிறது.

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட அனுமதி அளிக்க ரூ.3 லட்சம் லஞ்சம்: நீர்வளத் துறையினர் கைது
“இவிஎம் இயந்திரங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது” - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in