நியோமேக்ஸ் நிறுவன பங்குதாரர் காருடன் கடத்தல்? - 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

நியோமேக்ஸ் நிறுவன பங்குதாரர் காருடன் கடத்தல்? - 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
Updated on
2 min read

நாவலூர்: சென்னை ஓ.எம்​.ஆர். சாலை​யில் காரில் இருந்த நிதி நிறுவன முன்​னாள் பங்​கு​தா​ரர் மர்ம நபர்​களால் காருடன் கடத்​தப்​பட்​ட​தாக கூறப்​படுகிறது. அவரை மீட்க தாழம்​பூர் போலீ​ஸார் 4 தனிப்​படைகளை அமைத்து தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

போலீஸ் தரப்​பில் கூறப்​பட்​ட​தாவது: கடந்த 2016-ம் ஆண்டு அதி​முக ஆட்​சிக் காலத்​தில் செயல்​பட்​ட​தாக கூறப்​படும் நியோமேக்ஸ் நிறு​வனம், பொது​மக்​களிடம் முதலீடு பெற்று ரியல் எஸ்​டேட் தொழிலில் முதலீடு செய்​து, 3 மடங்கு லாபம் வழங்​கு​வ​தாக உறு​தி​யளித்​த​தாக கூறப்​படு​கிறது.

தமிழகம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான முதலீட்​டாளர்​களிடம் சுமார் ரூ.4,000 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக புகார்​கள் எழுந்​தன. பின்​னர் நிறு​வனம் செயலிழந்த நிலை​யில், அதன் நிர்​வாகி​கள் மற்​றும் தொடர்​புடைய பலர் கைது செய்​யப்​பட்​டு, வழக்கு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இந்த நிறு​வனத்​தின் முன்​னாள் பங்​கு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த சார்​லஸ் (56), நேற்று முன்​தினம் தனது காரில் நாவலூர் பகு​திக்கு சென்​றிருந்​தார். அவருடன், பெருங்​குடியைச் சேர்ந்த கார் ஓட்​டுநர் ஷியாம் (30) இருந்​தார்.

நாவலூரில் ஓ.எம்​.ஆர். சாலை​யோரத்​தில் காரை நிறுத்​திய சார்​லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்​தில் செயல்​படும் மது​பானக் கடை​யில் இருந்து மது வாங்கி வரு​மாறு ஓட்​டுநரிடம் கூறி​யுள்​ளார்.

இதையடுத்து ஷியாம் அங்​கிருந்து சென்​று 15 நிமிடங்​களுக்​குப் பிறகு திரும்பி வந்​த​போது, கார் மற்​றும் அதில் இருந்த சார்​லஸ் இரு​வரும் மாய​மாகி​யிருந்​தனர். அவரது செல்​போனை தொடர்பு கொண்​ட​போது அது அணைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த ஷியாம், உடனடி​யாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். தகவலின் பேரில் தாழம்​பூர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேம​ராக்​களை ஆய்வு செய்​த​போது, மற்​றொரு காரில் வந்த நான்கு பேர், சார்​லசுடன் சில நிமிடங்​கள் பேசிய பின்​னர், அவரை அவரது காருடன் அழைத்​துச் செல்​வது பதி​வாகி​யிருந்​தது.

இதையடுத்​து, இது திட்​ட​மிட்ட கடத்​தலாக இருக்​கலாம் என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர். கண்​காணிப்பு கேம​ராக்​கள் மற்​றும் தொழில்​நுட்ப ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில், சம்​பந்​தப்​பட்ட கார் திருச்சி சுங்​கச்​சாவடியை கடந்​து சென்​றது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், நியோமேக்ஸ் நிறு​வனத்​தில் முதலீடு செய்து பாதிக்​கப்​பட்ட சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த சில முதலீட்​டாளர்​கள் ஒன்​றிணைந்து இந்த சம்​பவத்​தில் ஈடு​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் போலீ​ஸாருக்கு எழுந்​துள்​ளது.

இருப்​பினும், அனைத்து கோணங்​களி​லும் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சார்​லஸை பத்​திர​மாக மீட்​க​வும், கடத்​தலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​ய​வும், தாழம்​பூர் காவல் நிலைய போலீ​ஸார் 4 தனிப்​படை அமைத்து, சென்​னை, திருச்சி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் தீவிர தேடு​தல் வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர். இந்​த சம்​பவம்​ சென்​னை புறநகர்​ பகு​தி​களில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்ளது.

நியோமேக்ஸ் நிறுவன பங்குதாரர் காருடன் கடத்தல்? - 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in