படப்பை அருகே 2 இளைஞர்கள் கொலை: போலீஸ் தீவிர விசாரணை

படப்பை அருகே 2 இளைஞர்கள் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
Updated on
1 min read

படப்பை: காஞ்​சிபுரம் மாவட்​டம், படப்பை அருகே அம்​மணம்​பாக்​கம் கிராமத்​தில் லோகேஷ் என்​பவர் வீட்​டில் தங்​கி​யிருந்த பரத், சீனு ஆகிய இரு​வரை வெட்​டிக் கொலை செய்து தப்​பிய​வர்​களை மணிமங்​கலம் காவல்​துறை​யினர் தேடி வரு​கின்​றனர். இந்த சம்​பவம் அந்த கிராமத்​தில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் மணிமங்​கலம் அருகே வரத​ராஜபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள் பரத் (24), சீனு (25). இரு​வரும் நண்​பர்​கள்.

கல்​லூரி பயின்று வந்​தனர். பகுதி நேர​மாக துக்க நிகழ்ச்​சிகளில் கானா பாடல்​கள் பாடி வந்​துள்ள நிலை​யில் நேற்று முன் தினம் இரவு ஒரகடம் அருகே நடை​பெற்ற துக்க நிகழ்​வுக்கு கானா பாடல் பாட சென்​றுள்​ளனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு படப்பை அடுத்த ஓரத்​தூர் ஊராட்சி அம்​மணம்​பாக்​கம் கிராமத்​தில் நண்​பன் லோகேஷ் (17) வீட்​டுக்கு வந்து தங்கி உள்​ளனர். அப்​போது வீட்​டில் லோகேஷின் தந்தை மோகன் (40) தாய் சங்​கீ​தா(37) தங்கை ஹரிணி (14) ஆகியோர் இருந்​துள்​ளனர்.

இதனிடையே காலை 11:30 மணி​யள​வில் 3 இருசக்கர வாக​னங்​களில் ஹெல்​மெட் அணிந்​த​படி வந்த மர்ம கும்​பல், வீட்​டில் நுழைந்​து,பரத், சீனுவை வெட்​டி​யுள்​ளனர். தடுக்க முயன்ற லோகேஷன் தந்தை மோக​னை​யும் அவர்​கள் வெட்டினர்.

இதனால் அச்​சமடைந்த 4 பேரும் ஒரு அறைக்​குள் சென்று கதவை சாத்​தி​யுள்​ளனர். தொடர்ந்து இரு​வரை​யும் சரமாரி​யாக வெட்டி கொலை செய்​து​விட்டு அந்த கும்​பல் அங்​கிருந்து தப்​பிச் சென்​றது.

பரத், சீனு இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்த நிலை​யில் இதுகுறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. நிகழ்​விடம் வந்த படப்பை போலீ​ஸார் இரு​வரின் உடல்​களை​யும் கைப்​பற்றி உடற்​கூறாய்​வுக்​காக தாம்​பரம் அரசு தலைமை மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பரத், சீனுவை வெட்டி கொலை செய்ய என்ன காரணம்.? மர்ம கும்​பலின் பின்​னணி குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். கொல்​லப்​பட்ட இரு​வர் மீதும் எந்த ஒரு குற்ற வழக்​கு​களும் இல்லை என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மேலும் கடந்த சில மாதங்​களுக்கு முன்பு சென்னை பல்​லா​வரத்​தில் நடை​பெற்ற இரட்டை கொலை வழக்​குக்​கும், இதற்​கும் தொடர்பு உள்​ளதா என்ற கோணத்​தி​லும் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

படப்பை அருகே 2 இளைஞர்கள் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை ரயில்வே கோட்டத்தில் இந்த நிதியாண்டில் 150 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளத்தை புதுப்பிக்க இலக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in