திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த 2 இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை

8 பேர் கொண்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த 2 இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை
Updated on
1 min read

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை​யில் கிரிவலம் வந்த 2 இளம்​ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழிப்பறி செய்த 8 பேர் கொண்ட கும்​பலிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

​திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த கூலி தொழிலா​ளி​யின் மகளான 23 வயது இளம்​பெண், சென்​னை​யில் உள்ள ஒரு தனி​யார் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வரு​கிறார். மே 31-ம் தேதி இரவு பவுர்​ணமியையொட்டி திரு​வண்​ணா​மலைக்கு கிரிவலம் வந்​துள்​ளார். பின்​னர் இரவு நேரத்​தில் திருக்​கோ​விலூர் புறவழிச் சாலை​யில் சென்று கொண்​டிருந்​த​போது இருசக்கர வாக​னத்​தில் வந்த அடை​யாளம் தெரி​யாத நபர்​கள், அப்​பெண்ணை வழிமறித்து மிரட்டி காதில் அணிந்​திருந்த தங்​கக்கம்மலை கழற்றி வாங்​கி​யுள்​ளனர்.

பின்​னர், அவரை மறைவான பகு​திக்கு அழைத்​துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்​துள்ளனர். மேலும் சில இளைஞர்​களை வரவழைத்து மொத்​தம் 8 பேர் கொண்ட கும்​பல் பாலியல் தொல்லை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர், அந்த பெண்ணை ஆபாச​மாக வீடியோ எடுத்​து​விட்டு அங்​கிருந்து தப்பிச் சென்​றுள்​ளனர்.

இந்தக் கும்பல், மே 30-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் கிரிவலம் முடித்து விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாக தருமபுரிக்கு சென்று கொண்டிருந்த போது பெரியகோளாப்பாடி அருகே வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்து, பின்னர் அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து 2 பெண்களும் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ராஜன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

இதில், திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் 16 வயது சிறுவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த 2 இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை
ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்: தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in