போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி: 2 போலீஸார் பணியிட மாற்றம்

தங்​கும் விடுதி உரிமையாளருக்கு சம்மன்
போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி: 2 போலீஸார் பணியிட மாற்றம்
Updated on: 
1 min read

நாகப்பட்டினம்: நாகை அருகே 137 கிலோ மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்ட வழக்​கு எதிரொலியாக 2 போலீஸார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு​வருக்கு மத்​திய வரு​வாய் புலனாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் சம்​மன் அனுப்​பி ​உள்ளனர்.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி அருகே பிரதாபராமபுரத்​தில் 137 கிலோ மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்ட வழக்​கில் சிந்​தாமணி கிராமத்​தைச் சேர்ந்த தவெக நிர்​வாகி​யாக இருந்த பூபாலன், அவரது நண்​பர்​கள் சுகன், சதீஷ், மணிகண்​டன் ஆகிய 4 பேரை மத்​திய வரு​வாய் புலனாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த கடத்​தல் சம்​பவத்​தில் மேலும் சிலருக்​குத் தொடர்பு இருக்​கலாம் என்ற கோணத்​தில் அதி​காரி​கள் விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். இது​தொடர்​பாக, நாகை மாவட்​டம் பிரதாபராமபுரம் நடுத்​தெரு​வைச் சேர்ந்த சுக​னின் கூட்​டாளியான ராஜ்குமாருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது. மேலும், மெத்​தம்​பெட்​டமைன் போதைப்​பொருளை கடத்​து​வதற்கு பயன்​படுத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படும் கார் ராஜ்குமாருக்​குச் சொந்​த​மானது எனவும் தகவல் வெளியாகி​யுள்​ளது.

அவர் வேளாங்​கண்ணி பகுதி​யில் 2 தங்​கும் விடுதி​களை நடத்தி வரு​வதுடன், பைனான்ஸ் தொழி​லிலும் ஈடு​பட்டு வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

வேளாங்​கண்ணி காவல் துணை கண்​காணிப்​பாளரின் ஓட்​டுநர் சிவா, வேளாங்​கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்​கீதா ஆகியோர் நேற்று திடீரென தஞ்​சாவூருக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில், சிவா, போதைப்​பொருள் கடத்​தல் வழக்​கில் கைது செய்​யப்​பட்ட பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுக​னின் உறவினர் என்​ப​தும், வேளாங்​கண்​ணி​யில் சுகன் நடத்தி வரும் தங்​கும் விடுதி​யில் கைப்​பற்​றப்​பட்ட டைரி​யில் சிவா, சங்​கீதா ஆகியோரது பெயர் இருந்​தத​தாகவும் கூறப்​படு​கிறது. ஆனால், இவர்​கள் பணி​யிட மாற்​றத்​துக்​கான காரணம் எது​வும் வெளிப்​படை​யாகத் தெரி​விக்​கப்​பட​வில்லை.

போதைப் பொருள் கடத்தல் வழக்கு எதிரொலி: 2 போலீஸார் பணியிட மாற்றம்
நாதக தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in