வியாசர்பாடியில் காரை கடத்திய 2 பேர் கைது

வியாசர்பாடியில் காரை கடத்திய 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்​தவர் மெல்​வின் (36). காங்​கிரஸ் கட்​சி​யின் மனித உரிமைப் பிரிவு மாநிலச் செயல​ராக இருக்​கும் இவர் நேற்று வியாசர்பாடி மேல்​பட்டி பொன்​னப்​பன் தெருவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டார்.

பின்னர் அதற்​குரிய பணத்தை கொடுப்​ப​தற்​காக காரை ​விட்டு கீழே இறங்​கிச் சென்​றார். அப்போது ஒரு நபர் அந்த காரை ஓட்​டிச் சென்​று​விட்​டார். மெல்​வின் உடனடி​யாக போலீ​ஸில் புகார் தெரி​வித்​தார்.

காரிலிருந்த மெல்​வினின் செல்​போன் ஜிபிஎஸ் சேவை​யின் மூலம், கார் எங்கு செல்​கிறது என்​பதை போலீ​ஸார் கண்​டறிந்து அதை பின் தொடர்ந்​தனர். இதில் கார் கும்​மிடிப்​பூண்டி சென்​று​விட்​டு, மீண்​டும் புழல் அருகே நிற்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து போலீ​ஸார் அங்கு விரைந்​தனர். போலீ​ஸாரை பார்த்​ததும், காரை அங்​கேயே நிறுத்​தி​விட்டு அந்த நபர் தப்​பியோடி​னார். போலீ​ஸார் காரை மீட்டு மெல்​வினிடம் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில் காரை கடத்​தி​யது கொடுங்​கையூர் கண்​ண​தாசன் நகரைச் சேர்ந்த சூர்யா (25), அவரது கூட்​டாளி மணலியைச் சேர்ந்த பரத் (28) என்​பது தெரிய​வந்​தது. போலீ​ஸார் இரு​வரை​யும் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

வியாசர்பாடியில் காரை கடத்திய 2 பேர் கைது
கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: பெண் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in