சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 2 பேர் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: தடை செய்​யப்​பட்ட மாஞ்சா நூலில் காற்​றாடி பறக்​க​விட்ட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மாஞ்சா நூலை பயன்​படுத்தி காற்​றாடி பறக்​க​விடு​வ​தால் இருசக்கர வாகன ஓட்​டிகள் மற்​றும் பொது​மக்​களுக்கு உயி​ரிழப்பை ஏற்​படுத்​தும் விபத்​துகளுக்கான அபா​யம் இருப்​ப​தால், சென்னை காவல்​துறை மாஞ்சா நூலை தயாரித்​தல், விற்​பனை செய்​தல் மற்​றும் மாஞ்சா நூலை பயன்​படுத்தி காற்​றாடி பறக்​க​விட தடை விதித்​துள்​ளது.

இந்​நிலை​யில் புது​வண்​ணாரப்​பேட்டை சிவன் நகர் 3-வது தெரு​வில் புது​வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்​றாடி பறக்​க​ விட்​டுக் கொண்​டிருந்த 2 பேரை பிடித்து காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். விசா​ரணை​யில் பிடிபட்​ட​வர்​கள் புது​வண்​ணாரப்​பேட்டை சிவன் நகரைச் சேர்ந்த சூர்யா (20), பிர​சாந்த் (21) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இரு​வரை யும் போலீ​ஸார் கைது செய் தனர். மேலும், விசா​ரணை​யில் அவர்​கள் ஆன்​லைன் மூலம் காற்​றாடிகளை​யும், மாஞ்சா நூலை​யும் வாங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது.

சென்னையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 2 பேர் கைது
சென்னை | ரூ.40 லட்சம் கையாடல் சந்தேகத்தால் தாக்குதல்: மாடியிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in