கேளம்பாக்கம் | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் 2 பேர் கைது

கேளம்பாக்கம் | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் 2 பேர் கைது
Updated on
1 min read

கேளம்பாக்கம்: கேளம்​பாக்​கம் அருகே தையூர் பகு​தி​யில் 21 வயதுடைய பெண் ஒரு​வர் வசித்து வரு​கிறார். இவர் சிறிது மன நலம் பாதிக்​கப்​பட்​ட​வர் என்​ப​தால், பெற்​றோர் அவரை வீட்​டில் விட்டு தின​மும் வேலைக்கு சென்று விடு​வர்.

இதற்​கிடை​யில், அப்​பெண் அடிக்​கடி மயங்கி வாந்தி எடுத்​து வந்​துள்​ளார். நேற்று காலை​யிலும் திடீரென மயங்கி வாந்தி எடுத்​துள்​ளார். இதனால், பெற்​றோர்​கள் மகளை அழைத்​துக் கொண்டு கோவளம் பகுதி தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்து சென்​றனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை மேற்​கொண்​ட​தில், 3 மாதம் கர்ப்​ப​மாக இருப்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்​து, பெற்றோர்​கள் கேளம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல்​நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், பாதிக்​கப்​பட்ட பெண் வீட்​டில் யாரும் இல்​லாத நேரத்​தில் அப்​பகு​தியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அடிக்​கடி வீட்​டிற்கு சென்று பாலியல் வன்​கொடுமை செய்​தது தெரிந்​தது. இதையடுத்​து, இரண்டு சிறு​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்​.

கேளம்பாக்கம் | மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் 2 பேர் கைது
துபாயில் ரூ.46 லட்சம் கையாடல் செய்து சென்னை வந்த ஏஜென்சி ஊழியரை கடத்தி தாக்குதல்: ஏஜென்சி உரிமையாளர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in