பெங்களூருவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்காட்டில் 2 உடல்கள் மீட்பு

Updated on: 
1 min read

சேலம்: பெங்​களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்​தவர் வாடகைக் கார் ஓட்​டுநர் இந்து சேகர் (52). இவர் கடந்த 2006-ம் ஆண்டு சுனிதா (40) என்​பவரைத் திரு​மணம் செய்​துள்​ளார். சுனிதாவின் தாய் மற்​றும் சகோ​தரர்​கள் தங்​களது குடும்​பத்​தில் அடிக்​கடி குழப்​பம் ஏற்​படுத்தி வந்​ததால், இந்து சேகர் அவர்​கள் மீது கோபத்​தில் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சுனிதாவின் சகோ​தரர் சங்​கரின் மாமியார், தனது குடும்​பத்​தினர் அடுத்​தடுத்து காணா​மல் போய்​விட்​ட​தாக பெங்​களூரு ஸ்ரீராமபுரா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்து, இந்து சேகர் மீது சந்​தேகமடைந்த போலீ​ஸார் அவரைப் பிடித்து விசா​ரணை நடத்​தினர்.

அப்​போது, தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி (65), அவரது சகோ​தரர்​கள் சிவகுமார் (42), சிவகுமாரின் மனைவி திவ்யா (36), மற்​றொரு சகோ​தரர் சங்​கர் (32), சங்​கரின் மனைவி நளினி (32), 7 வயது சிறு​வன் புனீத் உள்​ளிட்ட 7 பேரை​யும் கொலை செய்​த​தாக தெரி​வித்த இந்து சேகர், அவர்​களது உடல்​களை நந்​தி​மலை, சார்​வாடி உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் வீசிய​தாகவும் போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து, அவர் குறிப்​பிட்ட இடங்​களில் பெங்​களூரு ராமபுரா போலீ​ஸார் உடல்​களைத் தேடி வரு​கின்​றனர். இதற்​கிடையே, 2 உடல்​களை சேலம் மாவட்​டம் ஏற்​காடு மலைப்​பகுதி​யில் வீசிய​தாக இந்து சேகர் தெரி​வித்​தார்.

இதையடுத்து, டிஎஸ்பி பிர​பாவதி தலை​மையில், ஒரு இன்ஸ்​பெக்​டர், ஒரு எஸ்ஐ உள்​ளிட்ட 7 பேர் கொண்ட பெங்​களூரு போலீஸ் குழு​வினர், கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்ட இந்து சேகரை அழைத்​துக் கொண்டு நேற்று ஏற்​காடு மலைப்​பகுதிக்கு வந்​தனர். ஏற்காடு நாகலூர் அருகே காட்டுப்பகுதியில், பாலித்தீன் கவர் மற்றும் சேலையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த 2 பெண் உடல்களை கர்நாடகா போலீஸார் மீட்டனர். அது, இந்து சேகரின் மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி ஆகியோரின் உடல்கள் என தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்காட்டில் 2 உடல்கள் மீட்பு
போலந்து நாட்டில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு

X