கிரிப்டோ கரன்சி முதலீடு: ரூ.40 கோடி மோசடியில் இருவர் கைது

கிரிப்டோ கரன்சி முதலீடு: ரூ.40 கோடி மோசடியில் இருவர் கைது
Updated on
1 min read

சென்னை: கிரிப்​டோ கரன்சி முதலீடு என்ற பெயரில் ரூ.40 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், இரு​வரை அமலாக்​கத் துறை கைது செய்​துள்​ளது. சென்னை உள்பட 11 இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஹாஷ்பே கிரிப்​டோ கரன்சி மோசடி வழக்கு தொடர்​பாக, அமலாக்​கத் துறை​யின் சென்னை மண்டல அலு​வல​கம் கடந்த செப்​.1-ம் தேதி சென்​னை, கோவை மற்​றும் கொல்​கத்தா உள்ளிட்ட 11 இடங்​களில் சோதனை நடத்​தி​யது. இதில், ஹித்​தேஷ் குமார், இம்​ரான் பாஷா மற்​றும் சையத் உஸ்​மான் என்​கிற பாபு ஆகியோர் தங்​கள் கூட்​டாளி​களு​டன் இணைந்​து, ஹாஷ்பே என்ற பெயரில் ஒரு மோசடி​யான முதலீட்​டுத் திட்​டத்தை உரு​வாக்கி ரூ.40 கோடி வரை மோசடி செய்​தது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்​து, முக்​கியக் குற்​ற​வாளி​களான இம்​ரான் பாஷா, ஹித்​தேஷ் குமார் ஆகிய இரு​வரை அமலாக்கத் துறை கைது செய்​தது.

கிரிப்டோ கரன்சி முதலீடு: ரூ.40 கோடி மோசடியில் இருவர் கைது
"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in