சென்னை | கூரியர் மூலம் போதைப்பொருள் வாங்கி கடத்திய இருவர் கைது

தினேஷ், மெக்கலன்.

தினேஷ், மெக்கலன்.

Updated on
1 min read

சென்னை: கூரியர் மூலம் தாய்​லாந்​திலிருந்து போதைப்​பொருள் வாங்​கி, கடத்​திய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை​யில் போதைப்​பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​களை போலீ​ஸார் கைது செய்து வரு​கின்​றனர்.

குறிப்​பாக போதைப்​பொருள் கும்​பலை கைது செய்ய சென்​னை​யில் போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு செயல்​பட்டு வரு​கிறது. இப்​பிரிவு போலீ​ஸார் காவல் நிலைய போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்து கண்​காணிக்​கின்​றனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப்​பிரிவு போலீ​ஸார் வானகரம் போலீ​ஸாருடன் இணைந்து வானகரம் அடை​யாளம்​பட்​டு, சர்​வீஸ் ரோட்​டில் நேற்று கண்​காணித்​தனர். அப்​போது, அந்த வழி​யாக சந்​தேகப்​படும்​படி வந்த 2 கார்​களை மறித்து சோதனை செய்​த​போது, மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார் வியாசர்​பாடியைச் சேர்ந்த தினேஷ் என்ற பப்லு (34), கொரட்​டூரைச் சேர்ந்த மெக்​கலன் ட்ரெவர் (43) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து 18 கிராம் மெத்​தம்​பெட்​டமைன், 100 கிராம் உயர் வகை கஞ்​சா, 1.3 கிலோ கஞ்​சா, ரூ.1.12 லட்​சம், 4 செல்​போன்​கள் மற்​றும் 2 கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

விசா​ரணை​யில், தினேஷ் பழைய பொருட்​களை வாங்கி விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​வதும், மெக்​கலன் ட்ரெவர் இருசக்கர வாகன மெக்​கானிக் என்​பதும் இரு​வரும் தாய்​லாந்​திலிருந்து கூரியர் மூலம் போதைப்​பொருட்​களை வாங்கி கடத்​திச் சென்​றதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, இரு​வரும்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>தினேஷ், மெக்கலன்.</p></div>
இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: வியாசர்பாடியில் திரளான பக்தர்கள் தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in