திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது

திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது
Updated on
1 min read

சென்னை: திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள தங்​கும் விடு​தி​யில் கள்ள நோட்டு கும்​பல் பதுங்கி இருப்​ப​தாக ஒருங்​கிணைந்த குற்​றப் புல​னாய்வு பிரிவு போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் உதவி​யுடன் திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள பிரபல​மான தங்​கும் விடுதியில் சோதனை நடத்​தினர்.

அங்கு அறை எடுத்து தங்​கி​யிருந்த சபிக் ரஹ்​மான் (37) என்​பவரது அறை​யில் ரூ.11 லட்​சம் மதிப்​பிலான 500 ரூபாய் கள்​ள நோட்​டு​கள் கட்​டுக் கட்​டாக பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார், டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வரும் சபிக் ரஹ்​மானை கைது செய்​தனர்.

அவர் கொடுத்த தகவலின்​பேரில், தஞ்​சாவூரில் ரவிச்​சந்​திரன் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் இருந்து ரூ.22.79 லட்​சம் நல்ல ரூபாய் நோட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இவர் ரூபாயை இரட்​டிப் ​பாக்கி தரும் தொழில் செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

ராமாபுரத்​தில் கருப்பு தாள்

இதற்​கிடையே, ராமாபுரம் கோத்​தாரி நகர் பசுபதி தெரு​வில் உள்ள ஒரு வீட்​டில் கள்​ளநோட்டு தயாரிக்க பயன்​படுத்​தப்​படும் கருப்பு தாள்​கள் பதுக்கி வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக வளசர​வாக்​கம் காவல் சரக உதவி ஆணை​யர் செம்​பேடு பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, அந்த வீட்​டில் ராமாபுரம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் சோதனை நடத்​தினர். ஒரு மருத்​து​வருக்கு சொந்​த​மான அந்த வீட்​டில், தோட்​டப் பராமரிப்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த அருணாச்​சலத்​திடம் (63) போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

வீட்​டின் 2-வது மாடி​யில் இருந்த அலுமினிய சூட்​கேஸில் அச்​சிடப்​ப​டாத ரூபாய் நோட்​டுகளின் அளவுக்கு வெட்​டப்​பட்ட சுமார் 40 கட்​டு​கள் கொண்ட கருப்பு தாள்​கள் இருந்​தன.

அவை கள்ள நோட்டு தயாரிக்க பயன்​படுத்​தப்​படும் தாளாக இருக்​கலாம் என்று சந்​தேகம் எழுந்​துள்​ள​தால்​, தடய​வியல்​ ஆய்​வுக்​காக அனுப்​பப்​பட்​டுள்​ளன.

திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: இருவர் கைது
ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in