தவெக கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது: மதுபோதையில் சண்டையிட்ட போது வீசியதாக வாக்குமூலம்

தவெக கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது: மதுபோதையில் சண்டையிட்ட போது வீசியதாக வாக்குமூலம்
Updated on
1 min read

சென்னை: தவெக கூட்​டத்​தில் பாட்​டில் வீசப்​பட்ட விவ​காரத்​தில் 2 பேர் கைது செய்​யப்​பட்டனர். நடைபெற உள்ள தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, வில்​லி​வாக்​கம் சட்​டப்​பேரவை தொகுதி தவெக வேட்​பாள​ரான ஆதவ் அர்​ஜூனா அறி​முக கூட்​டம் அயனாவரத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு நடை​பெற்​றது.

கூட்​டத்​தில், கட்​சி​யின் நிர்​வாகி நாஞ்​சில் சம்​பத் பேசி கொண்​டிருந்த போது பெண்​கள் அமர்ந்​திருந்த இடத்​தில் உடைந்த கண்​ணாடி பாட்​டில் துண்​டு​கள் வந்து விழுந்​தது. இதில், கீழ்ப்​பாக்​கம், குட்​டியப்​பன் தெரு​வைச் சேர்ந்த கலை​வாணி (45) என்​பவர் காயம் அடைந்​தார். மேலும், கூட்​டத்​தில் இருந்​தவர்​கள் பயந்து அங்​கிருந்து கலைந்​தனர்.

இதனால், ஆத்​திரம் அடைந்த தவெக நிர்​வாகி​கள் ஆதவ் அர்​ஜூ​னா, வி.எஸ்​.​பாபு உள்பட பலர் அடுத்​தடுத்து கண்​டனம் தெரி​வித்​ததோடு, தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்ய வேண்​டும் எனக் கூறி போலீ​ஸாருடன் வாக்​கு​வாதம் செய்​தனர். அவர்​களை போலீ​ஸார் சமா​தானம் செய்​தனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக, தவெக சார்​பில் அயனாவரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். பொதுக்​கூட்​டம் நடை​பெற்ற இடத்​தின் அருகே உள்ள லாட்​ஜில் தங்கி இருந்த இரு​வரை பிடித்து காவல் நிலை​யம் அழைத்து சென்று விசா​ரித்​தனர்.

இதில், பிடிபட்​டது அயனாவரம் பொன்​வேல்​புரத்​தைச் சேர்ந்த அப்​பு​குட்டி மற்​றும் அதே பகு​தி​யைச் சேர்ந்த ரித்​திக் (19) என்​பது தெரிய வந்​தது. அப்​பு​குட்டி மின்​வாரி​யத்​தில் ஒப்​பந்த அடிப்​படை​யி்லும், ரித்​திக் ஏசி மெக்​கானிக்​காக வேலை செய்து வரு​வதும் தெரிய வந்​தது.

நண்​பர்​களான இரு​வரும் லாட்​ஜில் இருந்​ததும், மது​போதை​யில் சண்​டை​யிட்​ட​தில் மது​பாட்​டிலை ஒரு​வர் மீது ஒரு​வர் வீசி​ய​தில் தவறு​தலாக மது​பாட்​டில் உடைந்்து தவெக பொதுக் கூட்​டத்​தில் அமர்ந்​திருந்த பெண் மீது விழுந்து இடது கால் முட்​டி​யில் காயம் ஏற்​பட்​டது தெரிய ​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்​து, இரு​வரும் கைது செய்​யப்பட்டனர்​.

தவெக கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது: மதுபோதையில் சண்டையிட்ட போது வீசியதாக வாக்குமூலம்
சசிகலா கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளரானார் அய்யப்பன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in