கும்பகோணம் தவெக மாநகர செயலாளர் மீது தாக்கு, கார் கண்ணாடி உடைப்பு: போலீஸ் விசாரணை

முருகானந்தம்

முருகானந்தம்

Updated on: 
1 min read

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகர தமிழக வெற்றிக் கழக மாநகர செயலாளரை நள்ளிரவில் தாக்கி அவர் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் ரவி மகன் முருகானந்தம் (41). தமிழக வெற்றிக் கழக மாநகரச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காவிரி பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இரும்பு ராடுகளால் அவர் வந்த காரை சேதப்படுத்தினர். இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முருகானந்தம், கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், அத்துமீறி வழிமறித்து தாக்கி, காரை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், பல்வேறு கோணங்களில் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முருகானந்தம் தனது வீட்டிலிருந்து பாலக்கரை செல்ல நேரடியான சாலை இருக்கும் பட்சத்தில், புதிதாக கட்டப்பட்ட காவேரி பாலம் வழியாக சுற்றிச் சென்றது ஏன் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>முருகானந்தம்</p></div>
தவெக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: தாராபுரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in