ரூ.10 கொடுக்க முயன்றவரிடம் இருந்து ரூ.14,000 பறித்த திருநங்கைகள்

ரூ.10 கொடுக்க முயன்றவரிடம் இருந்து ரூ.14,000 பறித்த திருநங்கைகள்
Updated on
1 min read

பல்லாவரம்: பல்​லா​வரம் திருநீர்​மலை சாலை​யில் மதுபானக்கடை அருகே பணம் கேட்டு வந்த 3 திருநங்​கைகள், ஒருவரிடம் இருந்து ரூ.14 ஆயிரத்தை பறித்​துக் கொண்டு தப்​பிய சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்​தவர் மெருலால் யாதவ் (42). நேற்று முன் தினம் மாலை திருநீர்​மலை சாலை​யில் உள்ள மதுபான கடை​யில் மது அருந்​தி​விட்டு வெளியே வந்​துள்​ளார். அப்போது அடை​யாளம் தெரி​யாத 3 திருநங்​கைகள் அவரை வழிமறித்து பணம் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது. அவர்​களுக்கு ரூ.10 கொடுக்​கலாம் என்று மெருலால் யாதவ் தன் பையை திறந்​தார்.

அப்​போது பையில் இருந்து ரூ.10 எடுக்க முயன்​ற​போது, அதை எதிர்​பார்த்து காத்​திருந்​தது போல 3 திருநங்​கைகளும் சேர்ந்து செயல்​பட்​டனர். மின்​னல் வேகத்​தில் மெருலால் யாதவ் பையில் இருந்த ரூ.14 ஆயிரத்தை அப்​படியே பறித்து கொண்​டனர். “என்ன நடக்​கிறது” என்று அவர் சுதா​ரிப்​ப​தற்​குள், 3 பேரும் பணத்​துடன் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​விட்​டனர்.

திடீர் தாக்​குதலில் நிலைகுலைந்த மெருலால் யாதவ் கத்​தி​யும் பயனில்​லை. தன்​னிடம் இருந்த மொத்த பணத்​தை​யும் இழந்து நின்ற மெருலால் யாதவ், உடனடி​யாக பல்​லா​வரம் காவல் நிலையத்​தில் புகார் அளித்​தார்.

புகாரை பெற்​றுக்​கொண்ட பல்​லா​வரம் போலீ​ஸார், கொள்ளை வழக்கு பதிவு செய்​துள்​ளனர். பணத்தை பறித்​துச் சென்ற 3 திருநங்​கைகளை​யும் பிடிக்க தீவிர தேடு​தல் வேட்​டை​யில் இறங்கியுள்​ளனர். திருநீர்​மலை சாலை மற்​றும் மது​பானக் கடை சுற்​றி​யுள்ள சிசிடிவி காட்​சிகள் அடிப்​படை​யில்​ வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

ரூ.10 கொடுக்க முயன்றவரிடம் இருந்து ரூ.14,000 பறித்த திருநங்கைகள்
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in