வேலூர் அணைக்கட்டு பகுதி பட்டாசு கிடங்கில் தீ விபத்து - பெண்கள் இருவர் உயிரிழப்பு

வேலூர் அணைக்கட்டு பகுதி பட்டாசு கிடங்கில் தீ விபத்து - பெண்கள் இருவர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் இன்று ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அப்புகல் சாலையில் ஹரி பிரசாத் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. நடப்பு ஆண்டுக்கான தீபாவளி நெருங்கி வரும் நிலையில், இவரது கிடங்கில் விற்பனைக்காக பட்டாசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கிடங்கில் இன்று காலை பெண்கள் சிலர் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி, சங்கீதா அகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த அணைக்கட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்ட அணைக்கட்டு போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அணைக்கட்டு பகுதி பட்டாசு கிடங்கில் தீ விபத்து - பெண்கள் இருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர்களுக்கு உத்தரவிட கோரி முதல்வர் ரங்கசாமிக்கு அன்பழகன் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in