புதுச்சேரியில் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட அமைச்சர்களுக்கு உத்தரவிட கோரி முதல்வர் ரங்கசாமிக்கு அன்பழகன் மனு

தற்காலிக சபாநாயகர் அன்பழகன் |கோப்புப் படம்

தற்காலிக சபாநாயகர் அன்பழகன் |கோப்புப் படம்

Updated on: 
1 min read

புதுச்சேரி: காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மழை நிவாரணப் பணிகளுக்கு அமைச்சர்கள் தலைமையேற்று நேரில் முகாமிட்டு பணி செய்ய உத்தரவிடக் கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு வார காலத்துக்கு பெருமழை பெய்யக் கூடும். மழை பெய்யும்போது நிவாரணப் பணிகளும், மழை முடிந்த பிறகு ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியான ஒருங்கிணைப்பும் அவசியம் தேவை.

உள்ளாட்சித் துறை. பொதுப் பணித்துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, மின்துறை, வனத்துறை உள்ளிட்ட முக்கியம் வாய்ந்த துறையின் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நிவாரண பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது.

மழைக்கு பிறகு இயற்கையாகவே ஏற்படும் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை தீவிர காண்காணிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். நோய் தொற்றை தடுக்க சுகாதாரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உரிய உத்தரவுகளை பிறப்பித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்துறைச் செயலர், வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப் பணித்துறை, மின்துறை ஆகிய துறையின் துறை ரீதியான செயலாளர்களை கொண்ட சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்.

அமைச்சர்களை நிவாரணப் பணிகளை தலைமை ஏற்று நேரில் முகாமிட்டு பணி செய்ய முதல்வர் ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

<div class="paragraphs"><p>தற்காலிக சபாநாயகர் அன்பழகன் |கோப்புப் படம்</p></div>
“கடந்த கால ஆட்சியாளர்களின் அலட்சியமே இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்” - எம்.பி துரை வைகோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in