ஆந்திராவில் இருந்து காரில் குட்கா கடத்திய வியாபாரி கைது

போலீஸார் பறிமுதல் செய்த கார், குட்கா மூட்டைகள். (உள்படம்) அருள்செல்வன்

போலீஸார் பறிமுதல் செய்த கார், குட்கா மூட்டைகள். (உள்படம்) அருள்செல்வன்

Updated on
1 min read

சென்னை: ஆந்திராவில் இருந்து தமிழகத்​துக்கு காரில் குட்கா கடத்தி வந்த வியா​பாரி கைது செய்​யப்​பட்​டார். தடை செய்​யப்​பட்ட குட்​கா, போதைப் பொருட்​களுக்கு எதி​ராக சென்​னை​யில் சிறப்பு கண்​காணிப்பு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நந்​தம்​பாக்​கம் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மையி​லான போலீ​ஸார், ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்​தினம் நந்​தம்​ பாக்​கம் கலைஞர் நகர் பிர​தான சாலை - ஏழுகிணறு சாலை சந்​திப்​பில் கண்​காணித்​தனர்.

அப்​போது, ஒரு​வர் காரில் இருந்து மூட்​டைகளை இறக்​கிக் கொண்​டிருந்​தார். போலீ​ஸார் சென்று சோதனை நடத்​தி​ய​தில், மூட்​டைகளில் தடை செய்​யப்​பட்ட குட்கா புகை​யிலை பாக்​கெட்​கள் இருப்​பது கண்​டு​ பிடிக்​கப்​பட்​டது.

அவர் பல்​லா​வரம் பகு​தி​யைச் சேர்ந்த அருள் ​செல்​வன் (42) என்​பதும், ஆந்​தி​ரா​வில் இருந்து குட்கா புகை​யிலைப் பொருட்​களை மொத்​த​மாக வாங்கி வந்​து, சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் விற்​பனை செய்து வந்​ததும் தெரிந்​தது.

அவரை போலீ​ஸார் கைது செய்​து, குட்கா மூட்​டைகளை பறி​முதல் செய்​தனர். அவர் மீது ஏற்​கெனவே 3 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் கூறினர்​.

<div class="paragraphs"><p>போலீஸார் பறிமுதல் செய்த கார், குட்கா மூட்டைகள். (உள்படம்) அருள்செல்வன்</p></div>
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாட்ஸ்-ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in