புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 3 மாணவர்கள் சீர்திருத்தப் பள்ளியின் பின்புறம் சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவர், மற்ற 2 பேர் புதுவையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சிறுவர் சீர்திருத்தம் நிர்வாகம் சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்
திட்டக்குடி விவகாரத்துக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in