சென்னையில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைத்து பல லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைத்து பல லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை கொளத்​தூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒரு​வர், வீட்​டிலிருந்து பணிபுரி​யும் வேலை தேடி வந்​தார்.

கடந்த மே 20-ம் தேதி ராயப்​பேட்​டை​யில் உள்ள வணிக வளாகத்துக்​குச் சென்​ற​போது, தனி​யார் நிறு​வனத்​தின் மனிதவளப் பிரிவு அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்ட பெண் ஒரு​வர், பின்​னர் அவரைத் தொலைபேசி​யில் தொடர்புகொண்டு தங்​கள் நிறு​வனத்​தில் வேலை இருப்​ப​தாகக் கூறி​யுள்​ளார். மேலும், வீட்​டிலிருந்து வேலை செய்​வதற்​காக லேப்​- டாப்​பில் மென்​பொருள் நிறுவ ரூ.4,500 முன்​பணம் செலுத்த வேண்டும் எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதனை நம்​பிய அந்​தப் பெண், ஜி-பே மூலம் ரூ.4,500 செலுத்தியுள்ளார். ஆனால், பணத்​தைப் பெற்ற பிறகு வேலை குறித்த எந்​தத் தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மோசடி மற்​றும் தகவல் தொழில்​நுட்​பச் சட்​டப்​பிரிவுகளின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதையடுத்​து, மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஆரோனை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர் கொடுத்த தகவலின்​பேரில் அவரது கூட்​டாளி​களான மாதவரத்​தைச் சேர்ந்த கோகுல்​நாத் (26), கொடுங்​கையூரைச் சேர்ந்த அஜ்மல் பாஷா (32) ஆகிய மேலும் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் பலரை தேடி வரு​கின்​றனர். விசாரணையில், கைது செய்​யப்​பட்ட 3 பேரும் குழு​வாகச் செயல்பட்​டு, சுமார் 500 பேரிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைத்து பல லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
“2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய தொலைதூர கிராமங்களிலும் தரமான மருத்துவ வசதி அவசியம்” - ஆளுநர் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in