ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், பாண்டேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் ஆவடி ஸ்டாலின். இவர், தமிழ்நாடு இந்து சேவா சங் மாநில தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆவடி ஸ்டாலின், சமூக வலைதளம் மூலம் தனக்கும், மத்திய உள்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வருக்கும், ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறி, நேற்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “சில நாட்களுக்கு முன் அலீம்பாட்ஷா என்ற சமூக வலைதள முகவரி மூலம் எனக்கு குரல் பதிவு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவர்கள் பதவியிலிருந்து இறங்கும்போது என்கவுன்ட்டர் செய்யப்படுவர்.
உங்களை நேரில் வந்து ஜிகாத் செய்வேன்’ என கூறினார். ஆகவே,இந்த நபர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.