சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை: கடும் நடவடிக்கை எடுக்க வழிமுறை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடை​முறை​களை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வழக்​கறிஞர் தமிழ்​வேந்​தன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்​னை​யில் பெரும்​பாலான சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளு​டன் பிச்சை எடுக்​கும் பெண்​கள், அந்த குழந்​தைகளின் உண்​மை​யான தாய் தானா என்​பதை கண்​டறிந்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும்.

ஏனெனில் அவர்கள் வட மாநிலத்​தைச் சேர்ந்​தவர்​களாக உள்​ளனர். குழந்​தைகளை பிச்சை எடுக்க பயன்​படுத்​து​வதை தடுக்​கும் வகை​யில் உரிய நடவடிக்​கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள் ​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “பிறந்த பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்​பது என்​பது மனி​தாபி​மானமற்ற செயல்.

குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்​பதை தடுக்க தமிழக அரசு உரிய நடை​முறை​களை வகுக்க வேண்​டும். மேலும், இதுதொடர்​பாக என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து பதிலளிக்க வேண்​டும்” என உத்​தர​விட்டு விசா​ரணையை டிச.11ம் தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in