தூத்துக்குடியில் மது விற்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

போலீஸார் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கீதாஜீவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்கள். படம்: என்.ராஜேஷ் (உள்படம்: உயிரிழந்த அருணாச்சலம்)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கீதாஜீவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்கள். படம்: என்.ராஜேஷ் (உள்படம்: உயிரிழந்த அருணாச்சலம்)

Updated on
1 min read

தூத்துக்குடி: மது விற்​பனை​யில் ஈடு​பட்​ட​தாக கைது செய்​யப்​பட்ட இளைஞர் தூத்​துக்​குடி​யில் நேற்று உயி​ரிழந்​தார். போலீ​ஸார் தாக்​கிய​தில் அவர் உயி​ரிழந்​த​தாக தெரி​வித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்​கள் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தூத்​துக்​குடி அமுதா நகரை சேர்ந்த நாக​ராஜ் மகன் அருணாச்​சலம் (24). இவர், தூத்​துக்​குடி லெவிஞ்​சிபுரம் பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் பாரில் வேலை பார்த்து வந்​தார். கடந்த 17-ம் தேதி தூத்​துக்​குடி 3-ம் மைல் பகு​தி​யில் சட்​ட​விரோத​மாக மது விற்​பனை செய்​த​தாக அருணாச்​சலத்தை தூத்​துக்​குடி தென்​பாகம் போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிடம் இருந்து 120 மது பாட்​டில்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தென்​பாகம் காவல் நிலை​யத்​தில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர், 18-ம் தேதி அதி​காலை​யில் திடீரென மயங்கி விழுந்​த​தாக உறவினர்​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவரது குடும்​பத்​தினர் விரைந்து வந்​து, தூத்​துக்​குடி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அருணாச்​சலத்தை சேர்த்​தனர். கடந்த 5 நாட்​களாக சிகிச்சை பெற்று வந்த அருணாச்​சலம் நேற்று அதி​காலை உயி​ரிழந்​தார்.

‘காவல் துறை​யினர் தாக்​கிய​தால்​தான் அருணாச்​சலம் இறந்​துள்​ளார். சம்​பந்​தப்​பட்டபோலீ​ஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக முறை​யாக விசா​ரணை நடத்த வேண்​டும்’ என வலி​யுறுத்​தி, தூத்​துக்குடி - பாளை​யங்​கோட்டை சாலை​யில் மருத்​து​வமனை முன்பு உறவினர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர்.

அவர்​களுக்கு ஆதர​வாக திமுக முன்​னாள் அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தலை​மை​யில் திமுக​வினர் கலந்து கொண்​டனர். அவர்​களு​டன் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அருணாச்​சலம் உடலை முறை​யாக பிரேத பரிசோதனை செய்ய வேண்​டும் என, அவரது உறவினர்​கள் வலி​யுறுத்​தினர். இதற்கு போலீ​ஸார் சம்​ம​தித்​தனர். இதையடுத்​து,சுமார் 30 நிமிடங்​கள் நடை​பெற்ற போராட்​டம் கைவிடப்​பட்​டது.

திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி.தனது சமூக வலைதளப் பக்​கத்​தில், ‘நாகர்​கோ​விலை தொடர்ந்து தூத்​துக்​குடி​யிலும் காவல்​துறை​யின் சித்​ர​வதைக்கு உள்​ளாகி இளைஞர் ஒருவர் உயி​ரிழந்​திருக்​கும் செய்தி வேதனையளிக்​கிறது. காவல்​துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர் விஜய் உட்பட பல அமைச்​சர்​களும், அதி​காரி​களும் திரைப்​படம் பார்க்க விடுப்​பில் சென்​றுள்​ள​தால், இன்​றைக்கு தமிழ்​நாட்​டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்​ளதா என்​பதே சந்​தேகம் தான்.

நாளை பணிக்கு திரும்​பிய பிற​காவது, இந்தக் காவல் மரணம் குறித்து வாய் திறக்​கிறார்​களா என்று பார்ப்​போம்’ என தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடையே, போலீ​ஸார் தன்னை தாக்​கிய​தாக அருணாச்​சலம் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது.

<div class="paragraphs"><p>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கீதாஜீவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்கள். படம்: என்.ராஜேஷ் (உள்படம்: உயிரிழந்த அருணாச்சலம்)</p></div>
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in