சென்னை | காதலிக்குமாறு ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது

சென்னை | காதலிக்குமாறு ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: ​காதலிக்​கு​மாறு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்​டல் விடுத்த பட்​ட​தா​ரி​யான ஜவுளிக்​கடை ஊழியர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்னை புது வண்​ணாரப்​பேட்​டை​யில் குடும்​பத்​துடன் வசித்து வரும் இளம்​பெண் ஒரு​வர், தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியை​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவர் திரு​வொற்​றியூர் காலடிப்​பேட்​டையைச் சேர்ந்த ஜவுளிக்​கடை​யில் பணி​யாற்றி வரும் பட்​ட​தா​ரி​யான அஜு​முதீன் (27) என்​பவரை கடந்த சில ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், அஜு​முதீனின் நடவடிக்​கைகள் சரி​யில்​லாத​தால், பள்ளி ஆசிரியை அவரை விட்டு வில​கி​யுள்​ளார். இதனால் கடந்த 6 மாதங்​களாக பேசாமல் இருந்​துள்​ளார்.

இருப்​பினும், அஜு​முதீன் தொடர்ந்து பள்ளி ஆசிரியையை பின்​தொடர்ந்து சென்​று, தன்னை காதலிக்​கு​மாறு கட்​டாயப்​படுத்தி வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், கடந்த 15-ம் தேதி தண்​டை​யார்​பேட்​டை​யில் உள்ள பிரபல டீக்​கடை அருகே பள்ளி ஆசிரியை தனது தோழி​யுடன் நின்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த அஜு​முதீன், ஆசிரியை​யிடம் காதலிக்​கு​மாறு கட்​டாயப்​படுத்தி உள்​ளார். அவர் மறுத்​த​தால் தகாத வார்த்​தைகளால் பேசி, கொலைமிரட்​டல் விடுத்​து​விட்டு அங்​கிருந்து சென்​றுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த பள்ளி ஆசிரியை, தண்​டை​யார்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில் புகாரில் உண்மை இருப்​பது தெரிய​வந்​த​தால் அஜு​முதீனை போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து அவரிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை | காதலிக்குமாறு ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
அடிப்படை வசதிகள் கோரி பெரம்பூரில் முதல்வரின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவிந்த மக்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in