அடிப்படை வசதிகள் கோரி பெரம்பூரில் முதல்வரின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவிந்த மக்கள்

சென்னை பெரம்பூரில் உள்ள முதல்வர் விஜய்யின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்.

சென்னை பெரம்பூரில் உள்ள முதல்வர் விஜய்யின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்.

Updated on
1 min read

சென்னை: பெரம்​பூர் தொகு​தி​யில் அடிப்​படை வசதி​கள் செய்து தரக்​கோரி, முதல்​வர் விஜய்​யின் எம்​எல்ஏ அலு​வல​கத்தில் 50-க்​கும் மேற்பட்டோர் குவிந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பெரம்​பூர் தொகுதி மக்​களின் குறை​களை கேட்​டறிய வியாசர்​பாடி சர்மா நகர் முதல் தெரு​வில் எம்​எல்ஏ அலு​வல​கம் புதுப்​பிக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது. இந்த அலு​வல​கத்தை தொகுதி எம்​எல்​ஏ​வான முதல்​வர் விஜய் திறந்து வைத்​தார்.

இந்த அலு​வல​கத்​தில் பொதுமக்கள் குறை​களை தெரி​விப்​ப​தற்​காக பிரத்​யேக செல்​போன் செயலி​ அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. மேலும், அலு​வல​கத்​தில் கணினி வசதி​களு​டன் பணி​யாளர்​களும் நியமிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், கொடுங்​கையூர் வேதாந்தா முரு​கப்பா தெரு​வைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று பெரம்​பூர் எம்​எல்ஏ அலு​வல​கத்துக்கு வந்தனர்.

‘‘கழி​வுநீர் வடி​கால், சாலை, தெரு விளக்கு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக ஏற்​கெனவே எம்​எல்ஏ அலு​வல​கத்​தில் மனு அளித்​தும் உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை’’ என்று பெண்​கள் குற்​றம் சாட்​டினர்.

அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்த தவெக நிர்​வாகி​கள் மற்​றும் போலீஸ் அதி​காரி​கள் வந்​தனர். அவர்​களிடம் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பெண்​கள் தங்​கள் பகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள் குறித்து கேள்வி​களை எழுப்​பினர்.

இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட துறை​களின் அதி​காரி​களு​டன் பேசி, அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தவெக நிர்​வாகி​கள் உறுதி அளித்​தனர். இதைத் தொடர்ந்து அனை​வரும் கலைந்து சென்​றனர்.

இதுகுறித்து தவெக நிர்​வாகி​கள் கூறுகை​யில், ‘‘அப்​பகு​தி​யில் தனி​நபர் குடும்ப சொத்து தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ளது.

இதனால் சில அடிப்​படை வசதி​களை மேற்​கொள்ள முடிய​வில்​லை. இருப்​பினும் சட்​டத்​துக்கு உட்​பட்டு அடிப்​படை வசதி​கள் விரை​வாக செய்து கொடுக்​கப்​படும்’’ என்​றனர்.

<div class="paragraphs"><p>சென்னை பெரம்பூரில் உள்ள முதல்வர் விஜய்யின் எம்எல்ஏ அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்.</p></div>
நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டு திட்டம்: விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in