

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (46). இவர் கச்சிராயபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 7-ம் தேதிவீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சேலம் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
முன்னதாக அவர் சிகிச்சையில் இருந்தபோது அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில், பள்ளியில் வைத்து தன்னை ஆசிரியர் ஜெகதீசன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாக விஷம் குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஜெகதீசனை கச்சிராயபாளையம் போலீஸார் போக்சோ பிரிவில் கைது செய்தனர். இதனிடையே ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.